ANDROID APP

Q Frames Media

You Are Here: Home» Latest Updates , Other Media , Other Updates » Hansika About Simbu - Anantha Vikadan (Tamil)

“சிம்புவும் நானும் பிரிஞ்சுட்டோம்!” - ஸீ யூ ஹன்சிகா
Anantha Vikadan Weekly Magazine (24.07.2013)

''நீங்களும் காதல்ல விழுந்திட்டீங்க போல... சிம்பு கூட லவ் எப்படிப் போகுது?''

''நான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே இந்தக் கேள்விக்கு ட்விட்டர்ல பதில் சொல்லிட்டேன். லவ் பத்தி யோசிக்கக் கூட எனக்கு நேரம் இல்லை. தமிழ், தெலுங்கு ரெண்டு ஃபீல்டுலேயும் சாப்பிடக்கூட நேரம் இல்லாம ஓடிட்டு இருக்கேன்!''


''சிம்பு கூட சண்டை போட்டு பிரேக் அப் ஆகிட்டதாவும் நியூஸ் வந்துச்சே?''
''ஓ... முதல்ல லவ். இப்போ சண்டையா? ரொம்ப நல்லது. அப்படியே நானும் சிம்புவும் பிரிஞ்சுட்டோம்னு பெருசா எழுதிடுங்க. இந்தக் கதைக்கு ஒரு டிராஜடி க்ளைமாக்ஸ் கிடைச்சிடும்.''

''நெருப்பு இல்லாமப் புகையுமா?''
''ஏன் ஐஸ் கட்டி புகையாதா சார்? முதல்ல பிரபு தேவா, அப்புறம் சித்தார்த், இப்போ சிம்பு... அடுத்தது யாரு சிவகார்த்திகேயனா? இவங்க பேரையெல்லாம் எனக்கு சரியா ஸ்பெல் பண் ணக்கூட தெரியாது. யெஸ், சிம்புகிட்ட ரெண்டு முறை 'ஐ லவ் யூ’ சொல்லியிருக்கேன்தான். ஆனா, ரெண்டுமே கேமரா முன் னாடி மட்டும்தான். ஒண்ணு 'வேட்டை மன்னன்’ படத்துக்காக. இன்னொண்ணு 'வாலு’ படத்துக்காக. இப்போ போதுமா?''

''நீங்க மருமகளா வந்தா, ஏத்துக்கத் தயார்னு சிம்புவோட அப்பா டி.ஆர். சொல்லியிருக்காராமே?''
''அவர் என்ன சொல்லியிருக்கார்னா, அந்தப் பொண்ணு எங்க குடும்பத்துக்கு ஓ.கே-னு மட்டும்தான். மத்தபடி நானோ, சிம்புவோ ஏதும் சொன்னோமா? நானே இது பத்தி சிம்புகிட்ட பேசினதுகூட கிடையாது சார்.''

''சிம்பு உங்களுக்காக தி.நகர்ல ஒரு வீடு வாங்கியிருக்கிறதாக் கூட சொல்றாங்களே?''
(சிரிக்கிறார்) ''வீட்டுலேருந்து நேரா ஷூட்டிங்... ஷூட்டிங் முடிஞ்சதும் நேரா வீடு. இப்படித்தான் என் வாழ்க்கை போய்ட்டு இருக்கு. என்னைப் பத்தி ஏன் இப்படிக் கிளப்பிவிடறாங்கனு தெரியலை. போட்டி, பொறாமை இருந்தா... அதை நடிக்கிறதுல மட்டும் காமிக்கணும். என்னைப் பத்தி இப்படித் தப்பு தப்பாக் கிளப்பி விடறவங்களை அந்தக் கடவுள் நிச்சயம் பார்த்துப்பார். அவ்வளவுதான்!''

0 comments

Leave a Reply