சிம்புவை வைத்து, வெற்றிமாறன் இயக்குவதாக இருந்த வடசென்னை திரைப்படம் கைவிடப்பட்டுவிட்டதாக வெளியான செய்திகளை அடுத்து, அதை மறுத்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.
சில தொழில் நுட்ப பிரச்சனைகள் காரணமாக படம் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும், நிச்சயம் வடசென்னை திரைப்படத்தை இயக்குவேன் என்றும் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.
பொல்லாதவன், ஆடுகளம் போன்ற வெற்றிப் படங்களை தனுஷை வைத்து இயக்கியவர் இயக்குனர் வெற்றிமாறன். அவர் சிம்புவை வைத்து இயக்குவதாக இருந்த வடசென்னை திரைப்படம் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்குள்ளாகவே முடிந்து போனதாக தகவல்கள் வெளியாயின. அதற்கு பதில் அளித்துப் பேசிய வெற்றிமாறன், "ஆடுகளம் படம் வெளியாவதற்கு முன்பே, வடசென்னை படம் பண்ணலாம் என்று முடுவு எடுத்திருந்தேன்.
வட சென்னை படத்தின் கதை எனக்கு ரொம்ப அன்யோன்யமாக வந்திருந்தது. உடனே படம் இயக்க முடிவு செய்து, ஆரம்பித்தும் விட்டோம். ஆனால், சில தொழில் நுட்ப பிரச்சனைகள் காரணமாக இப்போது வடசென்னை படத்தை இயக்க முடியாத நிலையில் இருக்கிறோம். தொழில் நுட்ப பிரச்சனைகள் சரியாவதற்குள், தனுஷ் அவர்களை வைத்து ஒரு படம் இயக்கிவிட்டு மீண்டும், வடசென்னை படத்தைக் கையில் எடுப்பேன். நிச்சயம் சிம்புதான் கதாநாயகன்" என்று வெற்றிமாறன் கூறியுள்ளார்.

எனது மகள் இலக்கியாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். அது முடிந்ததும் சிம்புவுக்கு திருமணம் செய்து வைப்போம் என்று இயக்குநர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
விஜய டி.ராஜேந்தர்-உஷா தம்பதிக்கு சிலம்பரசன், குறளரசன் மற்றும் இலக்கியா என மூன்று பிள்ளைகள். இதில் மூத்தவரான சிமபு நடிகராகி விட்டார். குறளரசனும் விரைவில் நடிகராகப் போகிறார். மகள் இலக்கியா சினிமா பக்கமே திரும்பிப் பார்க்காமல் வளர்ந்தவர்.
இவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாம். இலக்கியா திருமணத்திற்குப் பின்னர் சிம்புவுக்குத் திருமணம் நடைபெறுமாம்.
ஆந்திர மாநிலம் காளஹஸ்திக்கு நேற்று தனது மனைவி, மகளுடன் வந்த ராஜேந்தர் அங்கு சாமி கும்பிட்டார். பின்னர் செய்தியாளர்கள் அவர்களை சுற்றிசத் சூழ்ந்தனர். அப்போது சிம்பு திருமணம் குறித்து கேட்டபோது, முதலில் இலக்கியா திருமணம் நடைபெறும்.அதன் பின்னர் சிம்பு திருமணம்தான்.சீக்கிரமே சிம்பு திருமணம் நடைபெறும் என்றார் ராஜேந்தர்.
உங்களது அடுத்த படம் என்ன என்ற கேள்விக்கு ஒரு தலை காதல் என்ற படத்தை இயக்கப் போகிறேன் என்றார்.
குறளரசன் எப்போது ஹீரோ ஆவார் என்ற கேள்விக்கு, இந்த ஆண்டு இறுதியில் குறளரசன் அறிமுகமாகும் படத்தை அறிவி்ப்போம் என்றார்.
நடிகர் சிம்பு சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு துவங்கிய வாலு படத்தில் பிசியாக உள்ளார். இப்படத்திற்கான அறிமுக டீஷர் வெளியாகி ஹிட் ஆகியுள்ளது. ஆனால் அதில் வரும் வசனங்கள் தனுஷை தாக்குவது போல் அமைந்துள்ளது.
இப்படத்தில், சிம்புவைப் பார்த்து ஹன்சிகா, ஒரு சில பசங்கள பாக்க பாக்கத்தான் புடிக்கும், ஆனா உன்ன மாறி பசங்கள பாத்த உடனே புடிச்சிடும் என்று வசனம் பேசுகிறார்
பாலா, செல்வராகவன் போன்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்க நான் விரும்பமாட்டேன். அதுபோன்ற கதைகளில் தனுஷ் வேண்டுமானால் நடிப்பார். அவர் தான் நடிகன். என் படங்கள் அனைத்தும் பொழுதுபோக்குப் படங்களாக இருக்கும். எனக்கு தேசிய விருதோ, ஆஸ்காரோ தேவையில்லை. என் படங்கள் ஓடும் திரையரங்குகளில் விசில் சத்தமும், கைதட்டலும் கேட்டால் போதும் என்று கூறுகிறார் சிம்பு.
Source : Dinamani
உதவி இயக்குநராகும் ஆசையில், சிவகங்கையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் சினிமாவில் இருக்கிறார். ராசி படம் தொடங்கி குஷி, ரெட், வில்லன், வரலாறு, காளை, ரேணிகுண்டா என்று பல படங்களை தயாரித்தவர்,
இப்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை எடுத்து வருகிறார். இதனையடுத்து மீண்டும் சிம்புவை வைத்து, புதுமுகம் விஜய்சந்தர் இயக்கத்தில் வாலு என்ற படத்தை தயாரிக்கிறார்.
சமீபத்தில் அவரை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது, 30 வருட சினிமா அனுபவத்தில், சினிமா ஒரு நல்ல வளர்ச்சியில் உள்ளது. ஆரோக்கியமாக இருக்கு. நிறைய புதுமுகங்கள் வராங்க, போறாங்க ஆனால் சினிமா அப்படியேத்தான் இருக்கு. படத்திற்கு என்ன தேவையோ அது தான் பட்ஜெட்டை முடிவு செய்யும். மற்றபடி சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட் என்று எந்த படத்தையும் பிரிக்க முடியாது.
சிம்புவை வைத்து எப்படி தொடர்ந்து படம் பண்ண முடியுது என்று அவரிடம் கேட்டால், காளை படம் 80 நாளில் முடிந்தது. வேட்டை மன்னன் படம் இடைவேளை வரை முடிந்து இருக்கிறது. சிம்புவிடம் இன்று இத்தனை எடுக்கணும் என்று முன்னாடியே சொல்லிவிட்டால் போதும், அதை அப்படியே முடித்து கொடுத்துவிடுவார். சிம்புவால் என் படங்கள் தாமதம் ஆனதே கிடையாது.
மேலும் நான் அஜித்தை வைத்து நிறைய படங்கள் எடுத்தேன். ஆனால் இப்போது அவர் பட வியாபாரம் பெரிய அளவில் போய்விட்டது. அதனால் என்னால் முடிந்த அளவிலான பட்ஜெட்டில் படம் எடுத்து வருகிறேன். அதுவே எனக்கு திருப்திகரமாக இருக்கிறது. என் மகனின் 18 வயசு படம் விரைவில் வெளிவர உள்ளது. இப்போதெல்லாம் புதுபடங்கள் வருவது அதிகமாகி கொண்டு போவது நல்ல விஷயம் தான். சினிமா எனக்கு ஒரு பேஷன். கடைசி வரை சினிமாவில் இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
Source : தினமலர்
சிம்பு, வரலட்சுமி நடித்து வரும் போடா போடி படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ஹாங்காங்கில் டிஸ்னி லேண்டில் நடைபெற்றுள்ளது.டிஸ்னி லேண்டில் நடைபெற்ற முதல் இந்தியப் படத்தின் சூட்டிங் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சிம்பு கூறுகையில் :
நான் சிறு வயதில் இருந்து பார்த்து ரசித்த கார்ட்டூன் கேரக்டர்களுடன் ஆடிப்பாட வாய்ப்பு கிடைக்கும் என நான் சிறிதும் நினைக்கவில்லை. டிஸ்னி லேண்ட் சூட்டிங் அனுபவம் மிகவும் பிரமாண்டமானது. அங்கு சூட்டிங் நடத்துவதற்கு அனுமதி பெற 90 நாட்கள் காத்திருந்தோம். பாடல் சூட்டிங் குறித்த முழுமையான விளக்கத்தை அளித்த பின்னரே அனுமதி கிடைத்தது.
இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என நம்புகிறேன் என்றார்.
தொடர்ச்சியாக என் படங்களில் நடிக்க ஹன்சிகாவுக்கு நான் சிபாரிசு செய்யவில்லை என்கிறார் சிம்பு. சிம்பு நடிக்கும் ‘வேட்டை மன்னன்' படத்தை தொடர்ந்து ‘வாலுÕ படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார் ஹன்சிகா மோத்வானி. சிம்புவின் சிபாரிசால் மீண்டும் ஹன்சிகா தேர்வு செய்யப்பட்டார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. இது பற்றி சிம்பு கூறியதாவது: இப்போதெல்லாம் சந்தோஷமாக இருக்கிறீர்களே... யாரையாவது காதலிக்கிறீர்களா? என்கிறார்கள். நான் சந்தோஷமாக இருந்தால் மற்றவர்களுக்கு சங்கடமாக இருக்கிறதோ என்னவோ? இந்த உலகத்தில் எனக்காக ஒருத்தி பிறந்திருப்பாள். அவரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அவரை கண்டுபிடிக்கும் வரை எனது தேடல் தொடரும். இப்போதைக்கு நடிப்பு, நடிப்பு, நடிப்புதான்.
‘வாலு' படம் தொடங்குகிறது. சமீபத்தில் இப்படத்திற்காக ஹன்சிகா, சந்தானத்துடன் பங்கேற்ற போட்டோ ஷூட்டும், சிறிய டிரெய்லரும் தயாரானது. விரைவில் அது வெளியிடப்படும். ‘வேட்டை மன்னன்Õ படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. வெளிநாட்டில் படமாக்க வேண்டிய நீண்ட ஷூட்டிங் பாக்கி இருக்கிறது. வாலு படத்தில் ஹன்சிகா மீண்டும் ஹீரோயினாக நடிக்க சிபாரிசு செய்தது ஏன் என்கிறார்கள். அவருக்கு நான் சிபாரிசு செய்யவில்லை. அதற்கு எனக்கு அவச¤யமில்லை. இயக்குனர்தான் ஹன்சிகாவை தேர்வு செய்தார். வாலு படம் காமெடி மற்றும் யூத்தை மையமாக வைத்து உருவாகிறது. இப்படத்திற்கு ஹன்சிகா பொருத்தமாக இருப்பார் என்று இயக்குனர் தீர்மானித்து தேர்வு செய்தார். இவ்வாறு சிம்பு கூறினார்.
சிம்பு நடிக்கும் படத்துக்கு ‘வாலு’ என்று தலைப்பிடப் பட்டுள்ளது. நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிக்கும் படம், ‘வாலு’. இதில் சிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடிக்கின்றனர். மற்றும் சந்தானம், கணேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். ‘தினம்தோறும்‘ நாகராஜ் உதவியாளர் விஜய் சந்தர் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: இதில் சென்னை இளைஞனாக சிம்பு நடிக்கிறார். எப்போதும் துறு துறுவென்று இருக்கும் கேரக்டர். இதே கேரக்டர் கொண்ட ஹீரோயின். இருவருக்குமிடையே நடிக்கும் கதைதான் படம். இதன் திரைக்கதை பரபரப்பாக இருக்கும். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கிறோம். ஒரு நிமிடம் ஓடும் படத்துக்கான டீஸரை ரெடி பண்ணிவிட்டோம்.
தமன் இசை அமைக்கிறார். சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த மாதம் முதல் ஷூட்டிங் தொடங்குகிறது. படம் தீபாவளிக்கு வெளிவரும். இவ்வாறு விஜய் சந்தர் கூறினார்.
நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில், ஏற்கனவே ‘வேட்டை மன்னன்’ படத்தில் நடித்துவருகிறார் சிம்பு. இந்தப் படத்தின் அடுத்த ஷெட்யூல் வெளிநாடுகளில் நடக்க இருப்பதாலும் போஸ்ட் புரொடக்ஷ்ஸ் வேலைகள் அதிகமாக இருப்பதாலும் பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Source : DINAKARAN
DISNEYLAND-ல் சிம்பு, வரலெட்சுமி சரத்குமார் மற்றும் சம்ரத் ( சிம்புவின் மருமகன்) சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.
DISNEYLAND-ல் படமாக்கப்பட்டு வரும் பாடல் காட்சிகள் குறித்து சிம்பு " அப்பா - மகன் உறவு குறித்து வாலி சார் எழுதிய பாடலை படமாக்கி வருகிறோம். இப்பாடலுக்கு தரணின் இசை அருமையாக வந்து இருக்கிறது.
'பாப்பா நான் இருக்கேன் பா... மதராவும் இருப்பேன் பா... எப்பவுமே நாந்தான் பா உன் பர்ஸ்ட் ப்ரெண்ட் பா... உன் பெஸ்ட் ப்ரெண்ட் பா..' என்ற இப்பாடலை நான் பாடி இருக்கிறேன். கண்டிப்பாக இந்த பாப்பா பாடல் வரவேற்பை பெறும். ' போடா போடி ' ஆல்பத்தில் எனக்கு பிடித்த பாடல் இதுதான்! " என்று தெரிவித்து இருக்கிறார்.
source : Cinema Vikatan
சில மனிதர்களை நாம் ஏன் நேசிக்கிறோம் என்று தெரியாது. ஆனால், கண்மூடித்தனமாக நேசிப்போம். நீண்டகால நேசிப்புக்குப் பிறகுதான், இதனால்தான் இவரை நேசித்து இருக்கிறோம் என்று உணர்ந்து கொள்ள முடியும்.பார்த்தவுடன் பழகலாம் என்று தோன்றுவது ஒரு ஆணுக்கு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஆணிடமும் மட்டுமல்ல; ஒரு ஆணுக்கு ஆணிடமும், பெண்ணுக்கு பெண்ணிடமும் கூட தோன்றலாம்.
ஒரு மனிதரிடம் அல்லது ஒருவரிடம் ஊருக்கே பிடிக்காத விஷயம் என்று ஒன்று இருக்கலாம். ஆனால், அந்த ஒரு சொல் மட்டுமே பிடித்த நபர்களும் இருக்கலாம். இப்படியெல்லாம் நான் சொல்லிக்கொண்டே போனால், தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.இப்படியே பல்வேறு கோணங்களில் பார்க்கப்படும் ஒரு நபர் வேறு யாருமில்லை, என் அன்பு நண்பன் சிம்புதான். எனக்கு எப்போதும் சிம்புவின் தன்னம்பிக்கையும், துணிச்சலும் பிடிக்கும். ஆனால், இதை மற்றவர்கள் வேறு விதமாகப் பார்க்கிறார்கள். அதைப்பற்றி அவரைப்போலவே நானும் கவலைப்படுவதில்லை. சிம்புவின் பலமே அந்த நம்பிக்கைத் திமிர்தான். இது பலமுறை அவரிடம் நேரிலேயே சொல்லியிருக்கிறேன்.
அப்படி நேசித்த நண்பனுக்கு ஒரு பாடல் எழுத வாய்ப்பு வந்தபோது, எனக்குள் ஏற்பட்ட சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. அதுவும் என் யுவன் இசையில்.
பாடலுக்கான சூழல் சொல்லப்பட்டு, மூன்று மணி நேரத்தில் எழுதியது. பாடல் பதிவானதும், நான் எதிர்பார்க்காதது, சிம்பு ஓடிவந்து என்னைக் கட்டிப்பிடித்து பாராட்டியது.
அந்தப் பாடல் ஏற்கனவே யாரோ ஒரு கவிஞர் இரண்டு நாட்களாக எழுதி திருப்தி வராததால் எனக்கு வழங்கப்பட்டது. இந்த செய்தி பாடல் பதிவு முடிந்த பின்னரே எனக்கு தெரிய வந்தது.
அந்தப் பாடல் தான், ‘மன்மதன்’ படத்தில்,
மன்மதனே உனை
பார்க்கிறேன்
மன்மதனே உனை
ரசிக்கிறேன்
என்று தொடங்கும் பாடல். இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு, இந்தப் பாடலில் இருந்துதான் தொடங்கியது. வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. படப்பிடிப்பு தொடங்கி ஒரு நாள் கழித்து, எனக்கு சிம்புவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ‘உடனே படப்பிடிப்பு தளத்திற்கு வா’ என்று.
ஒருவேளை, பாடலில் ஏதேனும் திருத்தம் இருக்குமோ என்று பயந்துகொண்டே சென்றேன். அங்கே என்னைப் பார்த்ததும் ஓடி வந்து வரவேற்ற சிம்பு, நேராக என்னை ஜோதிகாவிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்தார்.
நான் அப்போதுதான் ஜோதிகாவை முதல்முறையாக நேரில் பார்க்கிறேன். என்னைப் பார்த்ததும் இரு கைகளையும் பிடித்து குலுக்கி, ‘எனக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம்தான் தெரியும். இன்னிக்குத்தான் எனக்கு பாட்டோட அர்த்தத்தை சொன்னாங்க. வெரி வெரி சூப்பர்’ என்றதும், நான் கேட்டேன், ‘எந்த
வரி பிடித்திருக்கிறது?’ என்று.
தமிழை அப்போதுதான் கற்றுக்கொண்டிருந்த ஜோதிகா சொன்னார்,
ஒருமுறை பார்த்தால்
பலமுறை இளிக்கிறான்
என்ன விசித்திரமோ...
நண்பனே எனக்கு
காதலன் ஆனான்
அதுதான் சரித்திரமோ...
என்று பிள்ளைத் தமிழில் சொன்னபோது, என் மனம் சிறுபிள்ளையைப் போல் குதித்தது. எத்தனை அழகான ரசிகை என் கவிதைக்கு கிடைத்திருக்கிறார் என்று எண்ணும்போது, மனசுக்குள் பூ வாசம் வீசியது. தொடர்ந்து இன்னொரு வரியையும் சொன்னார்.
எனது படுக்கைஅறைக்கு
உனது பெயர் வைக்கவா?
‘என்ன அற்புதமான வரி. கலாசாரம் மீறாத காதல்’ என்றார். இதற்கெல்லாம் ஒரே ஒரு காரணம், அப்போதுதான் சூர்யா, ஜோதிகா காதல் மலர்ந்து கொண்டிருந்தது.
நான் சிம்புவை நினைத்து எழுதிய பாடலை, சூர்யாவை நினைத்தே ரசித்திருக்கிறார் ஜோதிகா என்பதை நினைக்கும்போது, எனக்கு இப்போதும் புன்னகை
மலர்கிறது.
நன்றி : தினகரன் வெள்ளி மலர்

சிம்பு தனது பேஸ்புக் இணையத்தில் 'விண்ணைத்தாண்டி வருவாயா -2' குறித்து விரைவில் தெரிவிக்கிறேன் என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் சிம்பு மீண்டும் கார்த்திக் பாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், ஏமி ஜாக்சன் நாயகியாக நடிக்க இருப்பதாகவும், 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' நவம்பர் 2011 துவங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின.
இது குறித்து இன்று விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் "விண்ணைத்தாண்டி வருவாயா 2ம் பாகம் குறித்து இன்னும் எதுவும் முடிவாகவில்லை. நவம்பர் 2011 துவங்க இருப்பதாக வந்துள்ள செய்தி முற்றிலும் தவறானது. ஜுன் 2012ம் ஆண்டு ஒரு படத்திற்காக சிம்புவிடம் பேசி வருகிறேன்.
ஏமி ஜாக்சன் அப்படத்தில் இருப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. கதை, படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் யார் என்பது குறித்து இன்னும் எதுவும் முடிவாகவில்லை.
விண்ணைத்தாண்டி வருவாயா 2ம் பாகம் ஒரு ஐடியா தானே தவிர இன்னும் அது குறித்து நான் முடிவு செய்யவில்லை. " என்று தெரிவித்துள்ளார்.
நன்றி : சினிமா விகடன் BETA